வேடசந்தூர்: கடைவீதியில் தீயணைப்புத் துறையினர் சார்பில் துண்டு பிரசுரம்
வேடசந்தூர் பெரிய கடை வீதியில் தீயணைப்புத் துறையின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், சரவெடிகளை வெடிக்க கூடாது என்றும், கூரை வீடுகள் இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக நடுரோட்டில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது என்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.