வேடசந்தூர்: வடமதுரையில் அதிமுக பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்த சிசிடிவி காட்சி வைரல்
வேடசந்தூருக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை வருகை தர உள்ளார். இதனை அடுத்து வேடசந்தூர், எரியோடு, வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் வடமதுரை பஸ் நிறுத்தம் அடுத்த ரயில்வே சாலையில் வைத்திருந்த ஒரு பிளக்ஸ் பேனரில் குறிப்பிட்ட ஒரு நபரின் புகைப்படத்தை மட்டும் கிழித்து விட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.