தொட்டியம்: தொட்டியத்தில் கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி மற்றும் நகைகள் மீது கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு -வாடிக்கையாளர்கள் சாலையில் திடீர் மறியல்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் நகைகடனுக்காக வைத்த நகைகள் ஆகியவற்றை வங்கியின் மேலாளர் ரவி, உள்ளிட்ட ஊழியர்கள் கையாடல் செய்ததாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்