வேடசந்தூர்: வெள்ளையகவுண்டன் குளக்கரையில் ஆயிரம் பனை விதைகள் நடும் விழா
வேடசந்தூர் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குருநாதநாயக்கனூர் ஊராட்சி வெள்ளைய கவுண்டன் குளக்கரையில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது. மேலும் நூறு வேம்பு, கொடிக்காப்புள்ளி, புளிய மரம் நாவல் கொன்றை ஆகிய மரக்கன்றுகளும் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கெண்டைய கவுண்டனூர் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள், குடகனாறு பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ராமசாமி, பெட் போர்டு குப்புசாமி, கல்வார்பட்டி முன்னாள் தலைவர் ரமேஷ், மினுக்கம்பட்டி நாகராஜ், கேபிள் டிவி ராமதாஸ், முருநெல்லி கோட்டை முன்னாள் தலைவர் ராமர், மதிமுக செல்வராஜ், தினகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.