காளையார்கோவில்: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் திருத் தேரோட்டம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர், இந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வெட்டுடையார் காளி அம்மனை வழிபட்டனர்.