பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 6- ம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநாடு குறித்து விளக்கி பேசினர். இந்த ஆயத்த மாநாட்டில் தமிழக அரசின் பேச்சுவார்த்தையில் ஏமாற்றம் ஏற்பட்டதை பிரதிபலிக்கும் வகையில் ஆயத்த மாநாடு நடைபெற்றது.