உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சரவணம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.