திண்டுக்கல் மேற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திண்டுக்கல்லில் பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டு தலைவர்கள் எஸ்தர் லதா, காஜாமைதீன், ராஜாமணி தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகி சண்முகவேல் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க நிர்வாகி துரைராஜ் வாழ்த்துரை வழங்கினர்.