வேடசந்தூர்: ஆத்துமேட்டில் பட்டாசு வெடித்ததில் பற்றி எரிந்த மேற்கூரை
வேடசந்தூர் ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம் (வயது 70) பூ வியாபாரி. இவரது மனைவிதுர்காதேவி. மகன் மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வரும் நிலையில் இருவர் மட்டுமே தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் வானவெடிகளை வெடித்த பொழுது பறந்து சென்ற வானவெடி வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த கூரையில் விழுந்து தீ பற்றி கொழுந்து விட்டு எறிந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த சேதமும் இல்லை.