காளையார்கோவில்: காளையார்கோவிலில் புனித வின்சென்ட் தே பவுல் சபை புனித அருளானந்தர் கிளைச் சபையின் ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் புனித வின்சென்ட் தே பவுல் சபை புனித அருளானந்தர் கிளையின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆரோக்கியசாமி தலைமையில், பங்குத்தந்தை சேசு முன்னிலையில், 80-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புத்தாடைகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழிலாளருக்கு ரூ.20,000 நிதி வழங்கப்பட்டன. இரண்டு லட்சத்திற்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வாழ்த்துரை, நன்றி கூறி விழா நிறைவடைந்தது.