தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் திமுக மாணவரணி சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி காந்திஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திண்டுக்கல்லில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கிழக்கு மாவட்ட மாநகர ஒன்றாம் பகுதி மாணவரணி சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.