திருவள்ளூர்: அரசு மருத்துவமனையில் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூங்காவை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திறந்து வைத்தார்
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியாக்கரம் (RBSK) திட்டத்தின் கீழ் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தின் மூலமாக பல நிறங்களில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பகுதிகள் - பார்வை உணர்வு மற்றும் புலன்கள் தூண்டுதல் தொடு உணர்வை தூண்டும் தரை & பாதை அமைப்புகள் - நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துதல் என 18 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பூங்காவை ஆட்சியப்பிரதாப் இன்று காலை திறந்து வைத்தார்