திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் பெரிய மாங்காடு வரை எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 50 மீனவ கிராம மக்கள் பழவேற்காட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் அதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடும் நாட்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நிவாரணம் கேட்டு ஆட்சியரை சந்திக்க சென்றனர் மீனவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்காமல் இழிவுபடுத்தியதை கண்டித்து மீனவர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.