வேடசந்தூர்: அழகாபுரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி விற்பனை அமோகம்
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் பொறி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக பொறி தயாரிக்கும் இங்கு ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு 10 நாட்கள் நல்ல வியாபாரம் நடக்கும். தற்பொழுது போட்டி அதிகமானதால் வியாபாரம் மந்தமாக உள்ளதாகவும் போதுமான வேலையாட்களும் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். உப்பு பொரி மூட்டை 450 ரூபாய்க்கும் உப்பு இல்லாத பொரி மூட்டை 550 ரூபாய்க்கும் விற்பனை ஆவதாக தெரிவித்தனர்.