சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி-வாகன ஓட்டிகள் அவதி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவியது. இன்று மாலை மேகமூட்டத்துடன் திடீரென இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சிங்கம்புணரி, பிரான்மலை, கிருங்காகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மழைநீரால் வாகன ஓட்டிகள் மெதுவாக பயணித்து அவதியடைந்தனர்.