சாத்தான்குளம்: அய்யனடைப்பு பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவர் ஆலயத்தில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உலக நன்மை வேண்டி மிளகாய் வத்தல் யாகமும் அதன் பின் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.