மறு சீரமைப்பு பணிகள் குஜிலியம்பாறை, எரியோடு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் 28-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதனால் திண்டுக்கல் அண்ணா நகர் ரவுண்ட் ரோடு, ஆர்.எம்.,காலனி (புதியது), எம்.வி.எம்., நகர் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தொட்டிகளுக்கு குடிநீர் உந்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மாநகராட்சி வார்டு 3,5,6,14,15, 16,17,18,19,20,32 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.