விளாத்திகுளம்: புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் புளியங்குளத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டி புளியங்குளம் இருந்து விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது. போட்டியை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.