புரசைவாக்கம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தென் சென்னை அனைத்து மீனவர் கிராம சபை சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தென்சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்பில் மத்திய மாநில அரசு கொண்டுவந்துள்ள நீல கொடி திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கட்டப்படும் பாலத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.