திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டு பகுதியில் மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் தலைமையில்"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு சட்டம்" என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தியின் படத்தை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்