திண்டுக்கல் கிழக்கு: பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து முன் பக்க டயர் வெடித்து அரண்மனைக்குளம் அருகே நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதி
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சித்தையன் கோட்டைக்கு அரசு பேருந்து அங்கு விலாஸ் இரக்கம் அருகே வந்தபோது, பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்து நிலை குலைந்தது. அலறி அடித்த பேருந்து பயணிகள். சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாவகமாக பேருந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பின்னர் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து பேருந்து பயணிகளை அனுப்பி வைத்தனர்