நாகல் நகர் சிறுமலை செட்டில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை ஒரு தார் 500 முதல் 800 ரூபாய் வரையிலும், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, பூவன் பழம், நாட்டு வாழை உள்ளிட்டவை 200 முதல் 500 ரூபாய் வரையிலும் ஏலம் போனது