நிலக்கோட்டை: பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திராவிட கழகம் சார்பில் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.