தூத்துக்குடி: முத்துநகர் கடற்கரையை தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்த மாணவர்கள்
ஆண்டுதோறும் நவம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் சுபேதார் சந்திரசேகர் தலைமையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.