நிலக்கோட்டை: நூதன முறையில் முதியவரிடம் திருடிய 10 லட்சம் பணத்தை CCTV உதவியுடன் 1 மணி நேரத்தில் மீட்ட வத்தலகுண்டு போலீசார்
மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த பரமசிவம்(87) கோயம்புத்தூரில் தனது மகனைப் பார்த்துவிட்டு திரும்ப ஊருக்கு வந்தபோது வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இறங்கியவர் அஜீரணக் கோளாறு காரணமாக ஓய்வு எடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்ல முற்பட்டபோது உதவி செய்வதாக வந்த மர்ம நபர் உதவி செய்வது போல் பேசி பையை அபேஸ் செய்து விட்டார். அந்தப் பையில் ரூ.10 லட்சம் பணம் இருந்தது இதனால் பதறிப் போன பரமசிவம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.