ஆனைமலை: ஆனைமலை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
ஆனைமலை பொள்ளாச்சி கிணத்துக்கடவு நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த என்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது, வேர் வாடல், வெள்ளை பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் அழிந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. நோய் தாக்குதலால்தென்னை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.