ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களுக்கு திண்டுக்கல் துரைராஜ்நகர் இல்லத்தில் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் தமிழர் திருநாளில் திராவிட பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்து தெரிவித்தார்