கண்டச்சிபுரம்: 'உருக்கிய நிலையில் 56 கிராம் தங்க கட்டி பறிமுதல்' ஒடுவன்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த இருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஒடுவன்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி எனும் நபர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று உள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகாமையில் இருந்தவர்க