நிலக்கோட்டை: கொடைரோடு சுங்கசாவடி அருகே வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 5 வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல், கொடைரோடு சுங்கசாவடி அருகே திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரி கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சண்முகஆனந்த், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சாலை வரியை செலுத்தாமல் இயக்கியது தெரியவந்ததை தொடர்ந்து 5 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து ரூ.47,500 அபராதம் விதித்ததோடு வரி பாக்கி ரூ.2,23,918 செலுத்தினால் மட்டுமே பயணிகளுடன் பஸ்ஸை இயக்க அனுமதிக்கப்படும் என்றனர்.