திருவொற்றியூர்: மணலி மண்டலம் இரண்டு அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர் முல்லை ராஜேஷ் சேகர் தனது வார்டுக்கு எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு
மணலி மண்டல அலுவலகத்தில் 40வது சாதாரண மண்டல கூட்டம் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் மண்டல அதிகாரி தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சுமார் 79 தீர்மானங்களை நிறைவேற்றினர். அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் தனது வார்டுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்