வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியில் உள்ள பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். நாள்தோறும் விநாயகர் கோவில் முன்பாக பஜனை பாடல்கள் பாடி அனைவருக்கும் அன்னதானம் வழங்குவர். அதேபோல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் பாட்டு பாடி அம்மனை வழிபட்டு கோஷங்கள் போட்டு கும்மி நடனம் ஆடி மகிழ்ச்சியுடன் பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.