திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாய விலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதற்கு ரூ.2.63 கோடியும், ரொக்கம் ரூ.3000/- வழங்குவதற்கு ரூ.208.24 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.