வேடசந்தூர் ஆத்துமேடு கணபதி நகரைச் சேர்ந்தவர் சின்னக்காளை நாதஸ்வர வித்வான். இவர் கடந்த 42 ஆண்டுகளுகளாக தாடிக்கொம்பு சௌந்தரராஜன் பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் வாசிப்பதற்காக நியமிக்கப்பட்டார். 42 ஆண்டுகளுக்கு முன்பு போதிய பஸ் வசதி இல்லாததால் வாரந்தோறும் சனிக்கிழமை வேடசந்தூரில் இருந்து நடந்தே கோவிலுக்கு சென்று பகல் முழுவதும் வாசித்து விட்டு மீண்டும் நடந்தே வேடசந்தூரில் உள்ள வீட்டுக்கு வருவார். அவரை பணியிலிருந்து தூக்கியதால் ஏழ்மையில் வாடுகிறார்.