திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, NSV ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிர்புறம் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான ஜெராக்ஸ் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கிப்ட் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் தடவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.