திருப்பூர் தெற்கு: முதலிபாளையம் குப்பை கொட்டும் விவகாரத்தில் இரண்டாவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சிக்கு பட்ட முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைது செய்யப்பட்ட நிலையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திருமண மண்டபத்தை விட்டு வெளியேறாத நிலையில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.