வடமதுரையை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர். இவருக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி மனோஜ் குமார் என்பவர் பேசியுள்ளார். அப்போது குணசேகரனின் செல்போன் நம்பர், ஆதார் எண் ஆகியவற்றை பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு 16 முறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், மறுநாள் லக்னோ போலீசார் உங்களிடம் தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன குணசேகரன் தன் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து 21 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.