ஒட்டன்சத்திரம்: காப்பிலியபட்டி, தங்கச்சிஅம்மாபட்டி ரேஷன் கடைகளில் வேஷ்டி சேலை வழங்கப்பட்டது
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. காப்பிலியபட்டி மற்றும் தங்கச்சி அம்மாபட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன், ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கி பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், திருமதி சிவபாக்கியம்ராமசாமி, மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளும் , திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.