கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கோரிக்கை மனு அனுப்பியவர் பேட்டி
Karur, Karur | Apr 12, 2024 கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை அமைந்துள்ள பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மூன்று மாடி கட்டிடம் கட்டிய தேமுதிக கவுன்சிலருக்கு எதிராக தொடரப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை மீறி புதிய பேக்கரி கடையை திறக்க முயற்சிப்பதை தடுக்க கோரி,இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் அலுவலகம் மூலம் கோரிக்கை மனு அனுப்பிவிட்டு, எம்.கே.செந்தில்குமார் என்பவர் பேட்டியளித்தார் .