மதுரை மாவட்டத்திலிருந்து 1984ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டு கடந்த 41 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட பொழுது புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேலு நாச்சியார் வளாகம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலு நாச்சியார் வளாகம் என பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் பெயர் பலகை எடுக்கப்பட்டு தற்பொழுது வேலுநாச்சியார் பெயரில் கட்டிடம் அழைக்கப்படுவது இல்லை