திருப்பத்தூர்: *திருப்பத்தூரில் திடீரென வேரோடு சாய்ந்த மின் கம்பம், மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி மின்சாரம் துண்டிப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய தெருமக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் தெருவில் மின்கம்பம் வேரோடு சாய்ந்து மின்வயர்கள் உரசி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பழுதடைந்த கம்பங்கள் குறித்து மின்வாரியத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இடி, மின்னல், மழையால் மின்கம்பங்கள் சேதமடைகின்றன. போதிய மின் ஊழியர்கள் இல்லாததால் பராமரிப்பு சிரமம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்கம்பங்களை ஆய்வு செய்யவும், ஊழியர்களை நியமிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.