உடையார்பாளையம்: தத்தனூர் MRC கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு
தத்தனூர் MRC கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் அமைக்கபட்டுள்ளது. இங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கபடவுள்ள வைப்பறைகள், வாக்கு எண்ணும் அறைகள், ஊடகமையம் உள்ளிட்டவைகள் அமைக்கபட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.