எட்டயபுரம்: பாரதியார் இல்லம் மற்றும் கி ரா நினைவு அரங்கத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி எம்பி
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது இதனை தொடர்ந்து அதை பழமை மாறாமல் புணரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டே ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து பணியில் முடிக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து எழுத்தாளர் கி ரா நினைவு அரங்கத்தை பார்வையிட்டார்