திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 2026 புத்தாண்டை வரவேற்று தமிழக வெற்றிக்கழக கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். காளியம்மன் கோவில் அருகே த.வெ.க நிர்வாகி சுந்தரமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.