திருப்பத்தூர்: "உலக ஓசோன் விழிப்புணர்வு" தின விழாவில் திருப்பத்தூரில் கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்ற மாணவ மாணவிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உலக ஓசோன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேஷனல் அகாடெமி கல்லூரி சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமையில், காவல்துறை ஆய்வாளர் கொடியசைத்து துவக்கினார். மாணவர்கள் புகை கட்டுப்பாடு, மின்சார சிக்கனம், குப்பை மேலாண்மை குறித்த பதாகைகளுடன், ஓசோன் பாதுகாப்பு கோஷங்களை எழுப்பி, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களும் பேரணி நடத்தினர்.