வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெகவினர் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமாலை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான அனுமதி, முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புக்கு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்