நத்தம் அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் சித்ரா தாமரைக்குளம் பகுதிக்கு 100 நாள் திட்ட வேலைக்கு சென்றுள்ளார் அப்பகுதியில் உள்ள ஓடை அருகே இருந்த புதரை அகற்றிய பொழுது மறைந்திருந்த அபூர்வ வகை இளநீல நீல நிறம் கொண்ட பாம்பு கட்டுவிரியான் வகையைச் சேர்ந்தது கடித்துள்ளது. இதனால் சித்ரா அலரி துடித்துள்ளார் இதையடுத்து அப்பகுதியில் வேலை செய்த சக பணியாளர்கள் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்