திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பெற ஊத்துக்கோட்டை காவல் நிலையம் சென்றபோது வாகனத்தை விடுவிக்க ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் அஜித்குமாரிடம் 10000 லஞ்சம் கொடுத்தால் விடுவிப்பதாக கூறியுள்ளார், இன்றைய தினம் அத்தகைய லஞ்ச பணத்தை அஜித்குமார் காவல் நிலையம் சென்று பாஸ்கரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாஸ்கரன் மற்றும் டேட்டா என்ட்ரி ஊழியர் சுகுமார் இருவரை கைது செய்தனர்