வேடசந்தூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை காவலர்களுக்கு வாழ்த்து கூறி தீபாவளி பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்
வேடசந்தூர் பகுதியை சுற்றி 22 ஊராட்சிகளில் உள்ள பல்வேறு தூய்மை பணியாளர்களை திரட்டி, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பேசியபோது, தூய்மை பணியாளர்களுக்கு 2600 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாண்புமிகு முதலமைச்சர் மூலமாக கடந்த இரண்டு வருடங்களாக 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் சம்பளம், வீட்டுமனை பட்டா, தூய்மை பணியாளர் அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை போன்ற கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.