காரைக்குடி: காரைக்குடி பகுதியில் நடந்த ஏஎஸ்பி அதிரடி சோதனையில் 4900 கிலோ ரேஷன் அரிசி,இரண்டு ஆம்னி வேன்,ஆட்டோ,கொரியர் வாகனம் பறிமுதல்-பெண் உட்பட 4 பேர் கைது
காரைக்குடி அருகே பள்ளத்தூர்,புதுவயல் பகுதிகளில் ASP ஆஷிஷ் புனியா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆம்னி வேன், ஆட்டோ, கொரியர் வாகனங்களில் இருந்த 4900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்டோ ஓட்டுநர் பெண் ரேவதி உட்பட நாகராஜ், செல்லப்பாண்டி, சந்தோஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.