தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல் கட்ட பெருமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் நடுவக்குறிச்சி மிக்கா வேல் ஆலயத்தில் 200 உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் தேவாலயத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.